அரசியல்வாதிகளை கொலை செய்யும் நோக்கத்துடன்  ரோ உருவாக்கப்படவில்லை – சரத்பொன்சேகா

171

இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோவிற்கு அயல்நாட்டு அரசியல்வாதிகளை கொலைசெய்யவேண்டிய தேவையில்லை என முன்னாள் இராணுவதளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் ரோ போன்ற அமைப்பு அயல்நாட்டின் அரசியல்வாதிகளை கொலை செய்ய முயலும் என நான் கருதவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரோ என்பது இந்தியாவின் உயர்ந்த தொழில்சார் ரீதியான புலனாய்வு அமைப்பு என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா அயல்நாட்டின் அரசியல்வாதிகளை கொலை செய்யும் நோக்கத்துடன்  ரோ உருவாக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சில புலனாய்வு அமைப்புகளை போலயில்லாமல் ரோ கடுமையா ஒழுக்ககட்டுப்பாடுகளை கொண்ட அமைப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவர் அரசியல்வாதியாவோ அல்லது அதிகாரத்திலிருக்கும்போதோ கருத்துவேறுபாடுகள் உருவாவது தவிர்க்க முடியாத விடயம் என  தெரிவித்துள்ள சரத்பொன்சேகா ஜனாதிபதிக்கும் பிரதமரிற்கும் இடையில் மோதல்நிலை நிலவுவதாக தான் கருதவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE