ரஜினி, அஜித்தால் அதிர்ச்சியான திரையரங்க உரிமையாளர்கள்

232

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் என்றால் ரஜினி, அஜித் ஆகியோர். இவர்கள் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும்.

இந்த நிலையில் விஸ்வாசம் படம் பொங்கல் ரிலிஸ் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டனர், ஆனால், திடீரென்று தற்போது அனைத்து திரையரங்க உரிமையாளர்கள் தலையிலும் இடி விழுந்துள்ளது.

ஆம், விஸ்வாசம் படத்துடன் ரஜினி நடித்த பேட்ட படமும் வரவுள்ளதாம், இதனால், பல திரையரங்கங்கள் வசூல் பாதிப்பு அடையும் என அச்சத்தில் உள்ளனர்.

அதே நேரத்தில் ஏதாவது ஒரு படத்தை தள்ளிப்போட சொல்லி கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.

SHARE