இருபதுக்கு – 20 தொடரை வெல்வது யார் ?

176

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நாளை இரவு 7.00 மணிக்கு கொழும்பு,  ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள், ஒரு இருபதுக்கு 20 போட்டி இடம்பெறவுள்ளது.

இந் நிலையில் நாளைய களமிறங்கவுள்ள திஸர பெரேரா தலைமையிலான இலங்கை அணிக் குழாமில் டினேஸ் சந்திமல், நிரோஷன் டிக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, தசுன் சாணக்க, கமிந்து மென்டிஸ், இசுரு உதான, லசித் மலிங்க, துஷ்மந்த சாமிர, அகில தனஞ்சய, கசுன் ராஜித, நுவான் பிரதீப், லக்ஷன் சந்தகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவ்விரு அணிகளும் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் அரங்கில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE