புறப்பட்ட 13 நிமிடத்தில் 188 பயணிகளுடன் மாயமான விமானம்..கடலில் வீழ்ந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்

123

இந்தோனேசியாவின் ஜகர்டாவிலிருந்து பங்கல் பினாங்குக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் கடலில் வீழ்ந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் ஜகர்டாவிலிருந்து பங்கல் பினாங்குக்கு புறப்பட்ட JT610 ரக லயன் ஏர் விமானம் புறப்பட்ட 13 வது நிமிடத்தில் மாயமானது. இதையடுத்து விமானியை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இந்தோனேசியாவின் தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விமானம் கடலில் வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த தகவலை தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் யூசிப் லதீப் வெளியிட்டுள்ளார்.

குறித்த விமானத்தில் 200 பேர் வரை பயணம் செய்யலாம் என வான் கண்காணிப்பு சேவை நிறுவனமான Flightradar 24 தெரிவித்துள்ளது.

விமானத்தில் 188 பேர் பயணம் செய்தார்கள் என்று Reuters பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து வேறு தகவல்களை தற்போது தெரிவிக்க முடியாது எனவும், எல்லா தகவல்களையும் தரவையும் சேகரிக்க முயற்சிப்பதாகவும் லியோன் ஏர் குழுமத்தின் தலைமை நிர்வாகி எட்வர்ட் சிரைட் கூறியுள்ளார்.

SHARE