தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யுத்தத்திற்குப் பின்னரான தமது அரசியல் முன்னெடுப்புக்களை சாதூரியமாக நடத்திக்கொண்டிருக்கும் பொழுது அதனைக் குழப்பும் நோக்கில் பல்வேறு செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அமைச்சுப் பதவிகளுக்காக கோடிக்கணக்கில் பணங்கள் பெற்று இவர்கள் செல்வார்கள் என்பது தமிழ் மக்களுக்குள்ளேயே இருக்கங் கூடிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாத உறுப்பினர்களும் ஏனைய கட்சிக்காரர்களும் கூறுகின்ற பொய்ச்சாட்டு.
அமைச்சுப் பதவியினைப் பார்க்கின்ற பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்ந்தவர்கள் எவரும் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷhவின் கீழ் தமிழ் தேசியக் கூட்டமைப்புச் சார்ந்தவர்கள் எவரும் இல்லை. அவ்வாறு விலைபோபவர்களாக இருந்தால் பலகோடிகளுக்கு விலை போயிருப்பார்கள். இனப்படுகொலையாளி மஹிந்த ராஜபக்ஷh அவர்கள் தமிழினத்தின் ஒரு தூரோகியாகவே கருதப்படுகின்றார் என்பதும் இவர்களுக்கு நன்கு தெரியும். இவ்வாறான பொய்ப் பரப்புரைகளை முகநூல்களிலும் டுவிட்டரிலும் வேண்டுமென்றே தமிழ் மக்கள் வெளியிடுகின்றார்கள்.
சிங்கள தேசத்திற்கு எதிராக உங்களுடைய முகநூல்களில் ஏன் செய்திகளை பிரசுரிக்கவில்லை. இந்த அசாதாரண சூழ்நிலையில் மக்களைக் குழப்பி நீங்களும் குழம்ப வேண்டாம். சிங்களவர்களுக்கு இடையில் அதிர்வளைகள் ஏற்படுகின்ற பொழுது தூரத்திலிருந்து வேடிக்கை பார்க்கவேண்டுமே தவிர, அல்லது அதிலிருந்து எமக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளவேண்டுமே தவிர அவர்களுக்கு ஆதரவாக எந்தச் செயற்பாடுகளையும் மேற்கொள்ளக் கூடாது. இக்கட்டத்தில் தமிழ் பேசும் மக்களாகிய நாம் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும்.