இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நேற்று நெடுந்தீவு கடல் பகுதியில் வைத்தே இவர்களை கைதுசெய்த கடற்படையினர் இவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை கங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைத்துள்ள கடற்படையினர், இன்று அவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.