வடக்கு இனி விடியும்!-வெள்ளைவான்னுக்கு நான் பொறுப்பு அல்ல

503

 

 

வடக்கு இனி விடியும்!

2009இல் மோதல்கள் முடிவுக்கு வந்த நாள் முதல் வடக்கு மக்களின் துயர் துடைக்கவும், அவர்கள் வாழ்வு சிறக்கவும் அயராது உழைத்த ஒரு தலைவன், இப்போது மீண்டு(ம்) வடக்கு அபிவிருத்தி அமைச்சராக விஸ்வரூபமெடுத்து வருகிறார்.

இது அவர் தனக்காக தான் தேடி – இரந்து – தாவிப் பெற்றுக்கொண்ட சலுகைப் பதவியல்ல.

துரோகி, பாவி, கொலைகாரா என்றெல்லாம் தூற்றி ஒதுக்கிய அனைத்துக் குரல்களுக்குள்ளும் அமைதியாக வாழ்ந்து, ஆர்ப்பாட்டமில்லாமல் தமிழ் மக்களின் விடியலுக்காக உழைத்து, 3 வருடங்களுக்கு மேலாக தன் தோழர்களுடன் ஓரமாக ஒதுங்கி தன்வழி – தனி வழி நடந்து, இன்று மக்களை வாழ வைப்பதற்காக – பொருத்தமான அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொண்டு வருகிறார்.

2009இல் முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குள் தள்ளப்பட்டு ஏதிலிகளாக வவுனியா வந்த மக்களை ஓடோடிப் போய்ப் பார்த்து உணவளித்து உதவிக்கரம் நீட்டுவதில் ஆரம்பித்து………….

முகாம்களிலிருந்த மக்களை படிப்படியாக விடுவித்து அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றி மறுவாழ்வளித்து…….

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, கைத்தொழில், விவசாயம், மீன்பிடி என்று அனைத்துத் துறைகளின் மேம்பாட்டுக்கும் தனக்கிருந்த கொஞ்ச அதிகாரத்துடன் முடிந்தளவு செய்து முடித்தவர்,

இன்று, வடக்கு மக்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்வதற்கான முழு அதிகாரத்தைக் கையில் எடுத்து அவர்கள் வாழ்வை உயர்த்துவதற்காக மீண்டு(ம்) வருகிறார்!

இனி எம்மண்ணில் கல்வி மறுமலர்ச்சி பெறட்டும்!

விவசாயம் புத்துயிர் பெறட்டும்!

மீன்பிடி புதுத் தெம்புடன் எழட்டும்!

தொழில்துறைகள் மேம்படட்டும்!

வேலைவாய்ப்புக்கள் பெருகி இளைஞர் வாழ்வு சிறக்கட்டும்!

சுற்றுலாத்துறை மேம்பட்டு, எமது பிரதேசம் எழில் கொஞ்சும் பூமியாக வந்தாரை வரவேற்று உபசரித்து உள்ளூர் பொருளாதாரமும், வேலைவாய்ப்புக்களும் பெருக்கட்டும்!

ஊடகத்துறை உண்மையான மக்கள் சேவை வழியில், தொழில்முறை நெறிகள் தவறாமல் வளர்ச்சியடையட்டும்!

இந்த மண்ணின் ஒவ்வொரு குடிமகனும்,

உள்ளத்தில் உண்மை ஒளியுடன்,

கள்ளங்கபடமற்ற மனதுடன்,

நேர்மையான எண்ணங்களுடன்,

வடக்கு மக்களின் வாழ்வில் ஒளியேற்றி எங்கள் பிராந்தியத்தை அபிவிருத்தியால் கட்டியெழுப்பக் கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்த முன்வரவேண்டும்!

வடக்கை அபிவிருத்தியால் தூக்கிநிறுத்தக் கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை, தனிப்பட்ட அரசியல் – கட்சி – கொள்கை பேதங்களுக்காகப் புறந்தள்ளாமல், மக்களுக்காகக் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த உழைக்கவேண்டும்.

வடக்கு இனி விடியும்!-வெள்ளைவான்னுக்கு நான் பொறுப்பு அல்ல இப்படித்தான் அமைச்சர் டக்ளஸ் கூறுவார் இனி

SHARE