போதைப்பொருள் பாவனை மாணவர்களிடையே வலிந்து திணிக்கப்பட்டு வருகின்றது

506

இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்த வண்ணமுள்ளது என சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீம் தெரிவித்துள்ளார்.

நாவிதன்வெளி பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பது சம்பந்தமான கலந்துரையாடல் நேற்று மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

போதைப்பொருள் பாவனை வியாபாரிகளால் மாணவர்களிடையே வலிந்து திணிக்கப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளை நற்பிரஜைகளாக உருவாக்குவதற்கான கனவுகளோடு தான் பாடசாலைக்கு அனுப்புகின்றனர். ஆனால் மாணவர்களிடையே அண்மைக் காலங்களாக போதைப்பொருள் பாவனை அதிகரிதுள்ளது.

மாணவர்கள் போதைவஸ்துக்கு அடிமையானால் மீட்டெடுப்பது கஸ்டமான காரியம். தற்பொழுது நாட்டில் மாணவர்களை குறிவைத்தே வியாபாரிகள் போதைவஸ்தினை விற்பனை செய்கின்ற சம்பவங்களை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கின்றோம்.

அத்தோடு போதைப்பொருள் பாவனை மூலமே பாரிய குற்றச்செயல்களும் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் குற்றச்செயல்களுக்கு ஆதாரமான போதைப்பொருள் பாவனையாளர்கள், விற்பனையாளர்களை சிறையிலடைப்பதற்கு மாணவர்கள், மதத்தலைவர்கள் அவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதன் மூலமே தடுக்க முடியுமென அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கோடு நடைபெற்ற இந்j நிகழ்விற்கு மதகுருமார்கள், ஆலய , பள்ளிவாசல் தலைவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

SHARE