மும்பை லால்மதி பகுதியில் பரவிய தீயினால் பல குடிசைகள் எரிந்து சேதமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்பு வீரர்களும் தீயணைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இத் தீவிபத்தினால் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இது வரை உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை எனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரவிக்கின்றன.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் வெளிவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.