ஆலய வழக்கு நவம்பர் 13 வரை ஒத்திவைப்பு

152

கல்முனை தமிழ் பிரதேச செயலக வளாகத்திலுள்ள ஆலயத்தை அகற்றவேண்டும் என்ற கல்முனை மேயர் சட்டத்தரணி எ.எம்.றக்கீப் தொடுத்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயருபன் கல்முனை மாநகரசபை மேயர் எ.எம்.றக்கீப் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தார்.

பிரதேசசெயலாளர் சார்பில் தோற்றிய சட்டத்தரணி என்.சிவரஞ்சித் ஆலயம் தொடர்பான பூரண அறிக்கையைச் சமர்ப்பிக்க ஒருமாத கால அவகாசம் தேவை. பிரதேச செயலாளர் புதியவர். எனவே அவகாசம்கேட்டார். எதிர்த்தரப்பினர் வாதம் செய்தனர்.

இறுதியில் எதிர்வரும் 13ஆம் திகதி தவணை என்றும் அதற்குள் பூரண அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டுமென்றும் அதுவரை ஆலயத்தில் யாரும் எதுவுமே செய்யக்கூடாதென்றும் நீதிவான் உத்தரவிட்டார்.

SHARE