மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் சிறப்பாக இடம் பெற்ற சர்வதேச முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் தின நிகழ்வு

181
-மன்னார் நகர் நிருபர்-
 
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் தினம் நேற்று புதன் கிழமை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற சர்வதேச முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் தின நிகழ்வின் போது பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றது.
குறிப்பாக முதியோர் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான பல்வேறு போட்டிகளும் இடம் பெற்றது. இதன் போது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரனினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் விருந்தினராக மடு வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும்  மாந்தை மேற்கு பிரதேசச் செயலக பணியாளர்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE