மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இரு விவசாயிகள்

180

அம்பாறை, பொத்துவில் கிரான்கோவை வயல் பிரதேசத்தில் நேற்று மாலை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னல் தாககுதலுக்குள்ளாகி உயிரிழந்த விவசாயிகள் இருவரும் பொத்துவில் நான்காம் வாட்டைச் சேர்ந்த 62 வயதுடையவர் மற்றம் பொத்துவில் 07ஆம் வாட்டைச் சேர்ந்த  65 வயது மதிக்கத்தக்கவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் வயல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக நேரில் சம்பவத்தை அவதானித்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இருவரது சடலமும் பிரதேச பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE