வவுனியாவில் போதைப்பொருளுடன் மூவர் கைது!

483
வவுனியா ஓமந்தை பகுதியில் காரில் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற மூவரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஏ9 வீதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே யாழ்ப்பாணத்திலிருந்து சம்மாந்துறை நோக்கி காரில் பயணித்த மூவர் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 24, 28, 29 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோ 126 கிராம் கேரளா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE