புற்றுநோயினால் கண்கள் பாதிப்பு!: சோனாலி பிந்த்ரே

504
புற்றுநோய் சிகிச்சையின் காரணமாக தனது கண்கள் பாதிக்கப்பட்டதாக நடிகை  சோனாலி பிந்த்ரே தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “புற்றுநோயினை குணப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் கீமோ தெரபி சிகிச்சையால் தனது கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இதனை என் கண்களில் ஏற்பட்ட வித்தியாசமான அறிகுறிகளின் வாயிலாக உணர்ந்தேன். சிலவேளைகளில்  என்னால்  புத்தகங்கள் கூட படிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு மிகவும் அச்சமடைந்தேன். ஆனால் தற்போது சரியாகி விட்டது” என சோனாலி பிந்த்ரே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சோனாலி பிந்த்ரே புற்றுநோய்க்கான  சிகிச்சையை அமெரிக்காவில் மேற்கொண்டு வருகின்றார்.

காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக சோனாலி பிந்த்ரே நடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE