தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஹன்சிகா. இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துள்ளது என்றாலும், அது ஏன் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
“இனி கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிக்க மாட்டேன், தேர்ந்தெடுத்து தான் நடிப்பேன். சென்ற வருடம் 18 வாய்ப்புகள் வந்தது, அதில் 4 மட்டுமே ஒப்புக்கொண்டேன்” என ஹன்சிகா கூறினார்.
மேலும் திருமணம் பற்றி பேசிய அவர் “எனக்கு 27 வயதாகிறது. என் அம்மா தான் அனைத்தையும் கவனித்து கொள்கிறார். என் திருமணம் பற்றிய முடிவை அவரிடமே விட்டுவிடுகிறேன். என அம்மா சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்துகொள்வேன்” என திரிவித்துள்ளார்.