வாழ்த்து மழையில் நனையும் விராட் கோஹ்லி: 30வது பிறந்தநாள் கொண்டாட்டம்

506

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி இன்று 30வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

தற்போதைய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் விராட் கோஹ்லி, அணித்தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

பல ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்தும், புதிய சாதனைகளை படைத்தும் வரும் கோஹ்லி இன்று தனது 30வது வயதில் அடியெடித்து வைக்கிறார்.

விராட் கோஹ்லியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் கிரிக்கெட் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் கோஹ்லிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக, ஐ.சி.சி தனது ட்விட்டர் பக்கத்தில் கோஹ்லி செய்த சாதனைகளை குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளது. பி.சி.சி.ஐ கோஹ்லிக்காக வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளது.

இந்நிலையில், கோஹ்லி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் ஹரித்துவாரில் தனது பிறந்தநாளை கொண்டாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று சதங்களை விளாசிய கோஹ்லி, தொடரையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE