மழை காரணமாக மன்னாரில் பல இடங்கள் நீரில் முழ்கியுள்ளது மக்கள் அவதி

452
(மன்னார் நகர் நிருபர்)
கடந்த சில நாட்களாக வடக்கு-கிழக்கு பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தாழ் நில பிரதேசங்கள் பல நீரில் மூழ்கியுள்ளது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இரவு பெய்த மழை காரணமாக பல்வேறு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளது. மன்னாரின் தாழ் நில பிரதேசங்களான சாந்திபுரம், ஜிம்றோன் நகர், எமில் நகர், உப்புக்குளம், எழுத்தூர், இருதயபுரம் போன்ற பிரதேசங்களே மேற்படி நீரில் முழ்கியுள்ளது. வீடுகள், வீதிகள், மைதானங்கள் போன்றவை அதிகளவில் நீர் சுழ்ந்துள்ளதால் குறிப்பிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். பாடசாலை மாணவர்கள், காலணிகள் கூட அணிந்து செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. ஒழுங்கான கழிவு நீர், முகாமைத்துவம் இன்மையால் மழை நீரானது வடிந்து செல்ல முடியாத நிலையில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நிரைந்து காணப்படுகின்றது.
வடி நீர் கால்வாய்களானது சில இடங்களில் குப்பை கூளங்களினால் அடைக்கப்பட்டிருப்பதனால் கழிவு நீரானது கடலுடன் கலக்க முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் கழிவு நீருடன் மனித மற்றும் விலங்குளின் கழிவுகள் மற்றும் குப்பைகள் கழப்பதனால் பலரும் தோல் சம்பந்தப்பட்ட தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கழிவுகளை சரியான முறையில் மழை நேரங்களில் அகற்றுவதற்கான ஏற்பாடுகளும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை எனவும் மக்கள் விசனம் தொரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் பல கிராமங்கள் நீரில் மூழ்கி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும்.
SHARE