விஜய் சேதுபதி – ஜெயம் ரவியின் படங்களை தாமதப்படுத்த வேண்டும்

475

‘உத்தரவு மகாராஜா’ படத்தைத் தயாரித்து நடித்திருக்கும் உதயா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி ஆகியோரின் படங்களின் வெளியீடுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உதயா நடித்து தயாரித்து இருக்கும் ‘உத்தரவு மகாராஜா’ படம் நவம்பர் 16-ம் திகதி வெளியாகிறது. இதில் பிரபு, உதயா, ஸ்ரீமன், மனோபாலா, பிரியங்கா, ஆடம்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையிலேயே படத்தின் நாயகன் உதயா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி ஆகியோருக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

அதில் ‘இந்த காலகட்டத்தில் எங்களைப் போன்றவர்கள் படம் எடுப்பது மிகவும் கடினம். எடுத்த படத்தை விநியோகஸ்தர்களைப் பார்க்க வைப்பது அதைவிடக் கடினம்.

நவம்பர் 16-ம் திகதி சிறிய பட்ஜெட்டில் தயாரான படங்களை மட்டும் வெளியிட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஒப்புதல் அளித்தது. தற்போது விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி மற்றும் ஜெயம் ரவி நடித்த அடங்க மறு ஆகிய படங்களும் அந்த திகதியில் வெளியாக இருப்பதாக கேள்விப்படுகிறேன்.

இந்த இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால் மற்ற சிறிய பட்ஜட் படங்கள் பாதிக்கப்படும். எனவே இருவரும் எங்களுக்காக அவர்களின் படங்களின் வெளியீட்டைத் தள்ளி வைக்கவேண்டும். இதை ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

SHARE