ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்

291

சமுத்திரங்களில் வாழும் திமிங்கிலங்கள் எளிதில் கண்ணில் படுவது இல்லை.

அவை ஆழமான பகுதிகளில் வாழ்வதே இதற்கு காரணமாகும்.

எனினும் இரை தேடியும், சுவாசிக்கவும் சமுத்திரங்களின் மேற்பகுதிக்கு வரும்.

இதன்போதே காணக்கிடைப்பதுடன், ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படும்.

எனினும் முதன் முறையாக திமிங்கிலங்களை எந்த நேரத்திலும் பார்க்கக்கூடிய மாற்றுவழி ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதன்படி செயற்கைக்கோள்களின் உதவியுடன் அவதானிக்கும்போது திமிங்கிலங்கள் தெளிவாக தென்படுகின்றன என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானியாவின் அந்தாட்டிக் சர்வே அமைப்பு என்பவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்தே இம் மாற்றுவழியை கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது திமிங்கிலங்களின் துடுப்புக்கள் உட்பட அனைத்து பகுதிகளும் தெளிவாக தென்படுவதாக தெரிவித்துள்ளனர்.

எனவே எதிர்காலத்தில் பாரம்பரிய முறைகளை விடவும் செயற்கைக்கோள்களை பயன்படுத்தி திமிங்கிலங்கள் தொடர்பாக ஆராய்ச்சிகளை இலகுவாக மேற்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE