வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தாக்கல் செய்த மனுவை  நிராகரித்த  உயர் நீதிமன்றம்.

137

வட மாகாண அமைச்சராக செயற்பட்ட ப.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி, தாம் வெளியிட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை நீக்குமாறு கோரி வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

ப.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி, 2017 ஆகஸ்ட் மாதம் சி.வி.விக்னேஸ்வரன் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

எனினும், அந்த வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE