தற்போது ஏற்பட்டுள்ள பெருபான்மை நிரூபிக்கும் வகையில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம்.

519

தற்போது ஏற்பட்டுள்ள பெருபான்மை நிரூபிக்கும் வகையில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில், ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இதன்போது விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதா என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசபற்றுள்ள உறுப்பினர்கள் கொக்கரித்தனர்.

அலரி மாளிகையில் ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை சந்தித்த போது லக்ஷ்மன் கிரியெல்ல இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச டுவிட்டர் பதிவு ஊடாகவும், இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார் என கிரியெல்ல சுட்டிக்காட்டியுளளார்.

அதற்கமைய இது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடல் மேற்கொண்டு, ஐக்கிய தேசிய கட்சி தங்கள் கருத்தை வெளியிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE