மன்னார், தள்ளாடி இராணுவத்தின் 54ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்.

515

மன்னார், தள்ளாடி இராணுவத்தின் 54ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் இடம்பெற்றுள்ளது.

குறித்த முகாம் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு அதிகாரியின் தலைமையில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

இதன்போது, நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் இரத்த தானம் செய்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் 69ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மன்னார் தள்ளாடி இராணுவ 54ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மன்னாரில் தொடர்ச்சியாக பல நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக டெங்கு சிரமதானப் பணிகள், மரம் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று இரத்த தான முகாம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

SHARE