வெள்ளத்தால் பதிக்கப்பட்ட பிரதேசங்களை நேரில் பார்வையிட்டார் தவிசாளர்

152

அண்மையில் நாட்டில் பொழிந்த கடும் மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இயக்கச்சி பகுதிக்கு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் நேரில் சென்று பிரதேச மக்களுடன் அவர்களது நிலை குறித்து கலந்துரையாடியுள்ளார்.

நேற்று மாலை குறித்த பகுதிக்கு சென்ற தவிசாளர் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த முன்னாயத்தம் தொடர்பாகவும் அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த பயணத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உப தவிசாளர் முத்துக்குமார் கஜன்,உறுப்பினர்களான வீரவாகுதேவர், கோகுல்ராஜ், றமேஷ் போன்றவர்களும் கலந்துகொண்டனர்.

SHARE