திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பை அண்டிய சில பகுதிகளில் இன்று காலை முதல் மாலை 4 மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த நீர்வெட்டு தெஹிவளை, கல்கிசை மாநகர சபைகள், இரத்மலானை, கொழும்பு – 6 மற்றும் சொய்சாபுர, முல்லேரியா ஆகிய பகுதியில் இன்று மாலை 4 மணிவரை நீர்விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
திருத்தப் பணிகள் காரணமாக தற்காலிக நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.