சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு, இனி தஞ்சம் கோர உரிமை இல்லை

138

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு, இனி தஞ்சம் கோர உரிமை இல்லை என டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள அட்டர்னி ஜெனரலான மேத்யூ விடேகர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தலைவர் கிறிஸ்டீன் நீல்சன் ஆகியோரால், வெளியிடப்பட்டுள்ள புதிய விதியின்படி, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறித்த கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘நாட்டிற்குள் சட்டவிரோதமாக அல்லது ஆவணங்கள் இன்றி நுழையும் அனைத்து வெளிநாட்டினரின் வருகையை இடைநிறுத்துவது மற்றும் நாட்டின் குடியேற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி அமெரிக்காவின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டவர்கள் மீது தேவையான நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் நுழைவை தடுக்கும் நடவடிக்கைளை எடுக்க ஜனாதிபதிக்கு அதிகாரமுள்ளது.

இப்படியான ஜனாதிபதியின் தடை உத்தரவை மீறுவோரையும், அகதிகளுக்கான தகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டவர்களையும் தடை செய்வதற்கு நாடாளுமன்றம் வழங்கியுள்ள அதிகாரத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்’ என கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய நலனை கருத்தில் கொண்டு அதிபர் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தலாம் என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. மேலும், இவ்வாறு அடிக்கடி ஆயிரக்கணக்கில் குடியேறிகள் நாட்டிற்குள் நுழைவதை, படையெடுப்பு என்று ட்ரம்ப் வர்ணித்துள்ளார்.

SHARE