லெய்செஸ்டர் சிற்றி கழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், அண்மையில் உலங்கு வானூர்த்தி விபத்து இடம்பெற்ற விளையாட்டரங்குக்கு அருகில் அஞ்சலி பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த கழகத்தின் உரிமையாளர் விச்சாய் சிறிவத்தனபிரபா உள்ளிட்ட 5 பேருக்கு இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுமார் 5000 ரசிகர்கள் இதில் கலந்து கொண்டதுடன் ஜூபிலி சதுக்கத்திலிருந்து, கிங் பவர் விளையாட்டரங்கம் வரை பேரணியாக சென்றனர்.
இதனிடையே, மைதானத்திற்கு முன்பாக கழக உரிமையாளர் விச்சாயின் சிலையொன்றை அமைப்பதற்கும் கழகத்தினால் நேற்று (வௌ்ளிக்கிழமை) தீர்மானம் ஒன்றும் எட்டப்பட்டுள்ளது.
தொழிலதிபர் விச்சாய்யின் லெய்செஸ்டர் அணி கடந்த 2016 ஆம் ஆண்டு ஃபெயார்டேல் பிரிமியர் லீக் போட்டியில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.