திருகோணமலையில், இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இரண்டு சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்க இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்து பல போதை மாத்திரைகள் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கன்னியாவைச் சேர்ந்த 38 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மதுபானம் காய்ச்சிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.