வட்டுவாகலில் வலை வீசிய இந்திய அரசியல் பிரபலம்

146

தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் ஊடாக வட்டுவாகல் பாலத்திற்கு சென்று, அங்கு வலைவீசி மீன் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களை சந்தித்துள்ளார்.

அத்துடன் அவரும் குறித்த மீனவர்களுடன் இணைந்து வலை வீசியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு பகுதிக்கு சென்று அங்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளதுடன், அங்குள்ள ஒரு வீட்டிற்கு சென்று நலம் விசாரித்துள்ளார்.

அத்துடன் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள சிற்பத்தினையும் பார்வையிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

SHARE