இனவெறியால் மோசமாக விமர்சிக்கப்பட்ட இளவரசி மெர்க்கல் மௌனமாக இருக்கும் அரச குடும்பம்

203

பிரித்தானிய அரச குடும்பத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளவரசி மேகன் மெர்க்கலை இனவாத கருத்துக்களால் வசைபாடியுள்ளதற்கு அரச குடும்பம் பதில் எதுவும் தெரிவிக்க மறுத்துள்ளது.

பிரித்தானிய அரச குடும்பத்து மருமகளாகிய நாள் முதல் இளவரசி மெர்க்கல் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.

அவர் நடந்தால் குற்றம் நின்றால் குற்றம் என்பது போல தொடர்ந்து வசைபாடுகளில் சிக்கி வருகிறார், சமீபத்தில் இவர் தனது கணவருடன் இணைந்து நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதுவரை தங்களது வலைதளங்களில் விமர்சனங்களை செய்துவந்த சமூகவலைதளவாசிகள் தற்போது கெசிங்டன் அரண்மனையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெர்க்கல் குறித்து இனவெறி ரீதியாக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

தொடர்ந்து பலர் மெர்க்கலை விமர்சித்து வந்த நிலையில், பல மணிநேரங்களுக்கு பின்னர் அதுகுறித்த கருத்துக்கள் நீக்கம் செய்யப்பட்டன.

மேலும், அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் நடந்த இத்தகைய மோசமான நிலைபாடு குறித்து கருத்து தெரிவிக்க அரச குடும்ப மறுத்துள்ளது.

SHARE