அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க வீரர்கள் டூ பிளிசிஸ்-மில்லர் ஜோடி 252 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.
அவுஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்காவின் டூ பிளிசிஸ் 125 ஓட்டங்களும், மில்லர் 139 ஓட்டங்களும் விளாசினர். இவர்களது 4வது விக்கெட் பார்ட்னர்ஷிப் 252 ஓட்டங்கள் ஆகும்.
இது அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பு, கடந்த 2003ஆம் ஆண்டு இலங்கை வீரர்கள் ஜெயசூர்யா-அட்டப்பட்டு ஆகியோர் அடித்த 237 ஓட்டங்கள் தான் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோராக இருந்தது.
இந்த சாதனையை தென் ஆப்பிரிக்க வீரர்கள் முறியடித்துள்ளனர். மேலும், இவர்களின் சதத்தின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 320 ஓட்டங்கள் குவித்தது தான், அவுஸ்திரேலிய மண்ணில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
