கைப்பேசி மின்கலத்தின் பாவனையை அதிகரிக்கும் புதிய நுட்பத்தை கண்டறிந்தது கூகுள்

235

ஸ்மார்ட் கைப்பேசிகளில் பெரும் குறைபாடாக கருதப்படுவது மின்கலத்தின் பாவனைக் காலம் குறைவாக இருப்பதாகும்.

அதாவது முழுமையாக சார்ஜ் செய்த பின்னர் குறிப்பிட்ட சில மணித்தியாலங்கள் வரை மாத்திரமே கைப்பேசியினை பயன்படுத்த முடியும்.

இப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் முனைப்புக்காட்டி வருகின்றன.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் புதிய நுட்பம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளது.

அதாவது அப்பிளிக்கேஷன்களை Dark Mode இல் பயன்படுத்துவதன் ஊடாக மின்கலங்களின் பாவனைக் காலத்தை அதிகரிக்க முடியும் என்பதாகும்.

White Mode இல் பயன்படுத்தும்போது அதிகளவு மின்சக்தி நுகரப்படுகின்றமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக யூடியூப் அப்பிளிக்கேஷனில் Dark Mode மற்றும் White Mode என்பன தரப்பட்டுள்ளன.

எனவே யூடியூப் போன்ற அப்பிளிக்கேஷன்களை Dark Mode இல் பயன்படுத்துதல் சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE