சமூக வலைத்தளங்களை பரபரப்பாக்கிய கொழும்பு உயர் நீதிமன்ற வளாகம்

157

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமைக்கு எதிராக பல்வேறு தரப்பினராலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை முதல் சட்டத்தரணிகள், பல கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் திரண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளன.

இதில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, தேர்தல்கள் ஆணையாளர், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் பெருந்திரளானோர் இன்று காலை முதல் கூடியுள்ள புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE