மலேசியாவில் குழந்தை பார்த்து கொள்ளும் பெண்ணிடம் தாய் ஒருவர் தன்னுடைய 9 மாத மகளை கொடுத்துச் சென்ற நிலையில் தற்போது அந்த குழந்தை பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவின் Sepang மாவட்டத்தில் இருக்கும் Serdang மருத்துவமனைக்கு பெற்றோர் தங்களுடைய 9 மாத குழந்தையை கடந்த 7-ஆம் திகதி ஆபத்தான நிலையில் அனுமதித்தனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அதன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்று கூறி தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். அதன் பின் 10-ஆம் திகதி குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Kajang பகுதியின் Bandar Baru Bangi-வில் குழந்தையை பார்த்து கொள்ளும் பெண்ணிடம் இவர்கள் தங்கள் குழந்தையை பார்த்து கொள்ள கொடுத்துள்ளனர்.
அதன் பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை, குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
குழந்தையின் பிரேதபரிசோதனை அறிக்கையில் உடலில் பலத்த காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து குழந்தையை பார்த்துகொள்ளும் பெண், அந்த பெண்ணின் கணவரை பொலிசார் கைது செய்தனர்.
இதில் நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் methamphetamine என்ற போதைக்கு அடிமையானவன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது