ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு ஜோதிகா நடனம் ஆடும் வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மலையாளத்தில் வெளியான “வெளிப்பாடிண்டே புஸ்தகம்” திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த “ஜிமிக்கி கம்மல்” பாடல் சென்சேஷனாக மாறியது. பட்டிதொட்டியெங்கும் பிரபலமான ஜிமிக்கி கம்மல் பாடல் சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த பாடலின் உரிமையை பெற்று, ராதாமோகன் தனது இயக்கத்தில் உருவாகிவரும் காற்றின் மொழி படத்தில் பயன்படுத்தியுள்ளார். சமீபத்தில் இந்த பாடலின் படம்பிடிப்பு நடந்தது. இதில் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா, லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல் மற்றும் ஆர்ஜே சான்ட்ரா ஆகியோர் நடனமாடி உள்ளனர்.
ஜிமிக்கிக் கம்மல் பாடலுக்கு ஜோதிகா கலக்கல் டான்ஸ் போட்டுள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் வெளியாகி, தற்போது வைரலாகி வருகின்றது.
சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அதன் டிரைலர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. தற்போது ஜோதிகாவின் ஜிமிக்கல் கம்மல் வெர்சன் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
காற்றின் மொழி திரைப்படம் வரும் 16ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.