கனடாவில் நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பு

135

அளவுக்கு அதிகமான சட்டவிரோத போதைப்பொருள் பாவனையினால் கடந்த இரண்டு ஆண்டுகளில், சராசரியாக நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவின் பொது சுகாதார நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றுக்கு அமைய இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அளவுக்கு அதிகமான சட்டவிரோத போதைப்பொருள் பாவனை காரணமாக உயிரிழந்தவர்களின் சமூக மற்றும் பொருளாதார பின்னணி தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.

அதற்கமைய இந்த நெருக்கடி நிலையானது மிகவும் மிகவும் கடுமையாக காணப்படுவதாகவும் குறித்த ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, பிரிட்டிஷ் கொலம்பியாவில் அளவுக்கு அதிகமான சட்டவிரோத போதைப்பொருள் பாவனையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு 293ஆகக் காணப்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையானது 2016ஆம் ஆண்டு 639ஆக உயர்வடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE