ஐந்து இலட்சம் ரூபா பணத்தினை கப்பமாக பெற்றுக்கொண்டவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

158

கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தினை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்பு பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி பொன்னகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு கடந்த 6ஆம் தகதி பொலனறுவையை சேர்ந்த சில நபர்களால் கடத்தப்பட்டார்.

பின்னர் இளைஞனின் உறவினர்களிடம் ஐந்து இலட்சம் ரூபா பணம் கேட்டு தொலைபேசியல் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட இளைஞன் மற்றும் குறித்த இளைஞனனின் உறவினர்களால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணகைளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்புப்பிரிவு பொலிஸார் மேறகொண்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலனறுவையை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டதுடன். குறித்த இளைஞனை கடத்திய வாகனமும் கைபற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யபபட்ட இரண்டு சந்தேக நபர்களையும் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதின்ற நீதிவான் ம.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்தே எதிர் வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த இளைஞரை கடத்துவதற்கு பிரதான சூத்திரதாரியாக இருந்த சந்தேகத்தில் முல்லைத்தீவு தீருமுறிகண்டி பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையற்றும் ஒருவரை இன்று கிளிநொச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடம் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆயர்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE