உங்களின் கடைசி ஆசையை நிறைவேற்றிவிட்டேன் – சயாரி

142

இந்தோனேசியாவில் கடலில் மூழ்கிய விமானத்தில் தனது வருங்கால கணவரை பறிகொடுத்த பெண் அவரின் இறுதி ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

ஜகர்டா நகரிலிருந்து கடந்த மாதம் 29-ஆம் திகதி 189 பயணிகளுடன் கிளம்பிய விமானம் கடலில் விழுந்தது.

இதில் உள்ளிருந்த அனைவரும் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. விமானத்தில் ரியோ நந்தா என்ற மருத்துவர் பயணித்துள்ளார்.

ரியோவுக்கும் சயாரி (26) என்ற பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு நவம்பர் 11-ஆம் திகதி திருமணம் நடக்கவிருந்தது.

ஆனால் அதற்குள் துரதிஷ்டவசமாக ரியோ உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில் விமான பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் ரியோ ஒரு விடயத்தை சயாரியிடம் கூறியுள்ளார்.

அதாவது, நான் பணிவிடயமாக செல்கிறேன், நவம்பர் 11க்குள் வரவில்லை என்றால், அன்றைய தினம் நான் வாங்கி கொடுத்த திருமண ஆடையை உடுத்தி கொள், அழகாக மேக் அப் போட்டு கொண்டு நல்ல புகைப்படங்களாக எடுத்து எனக்கு அனுப்பிவிடு என கூறியுள்ளார்.

இதை தற்போது கனத்த இதயத்துடன் நிறைவேற்றியுள்ளார் சயாரி.

அதன்படி ரியோ வாங்கி கொடுத்த வெள்ளை நிற ஆடையை உடுத்தி கொண்டு புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், என் துக்கத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது, ரியோ என்னுடன் இல்லையென்றாலும் அவரின் சகோதரிகள் என்னுடன் இருந்து என்னை அன்பாக பார்த்து கொள்கிறார்கள்.

உங்களின் கடைசி ஆசையை நிறைவேற்றிவிட்டேன்.

நீங்கள் சொர்க்கத்தில் இப்போது மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என எனக்கு தெரியும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

SHARE