அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹேஸ்டிங்ஸ், மனவேதனையுடன் அனைத்துக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஜான் ஹேஸ்டிங்ஸ் பந்துவீசும்போது, நுரையீரலில் ரத்தக் கசிவு பிரச்சனை இருந்ததால் ரத்த வாந்தி எடுத்தார். அதனைத் தொடர்ந்து, மருத்துவர்களை அவர் அணுகியபோது மீண்டும் ரத்தக் கசிவு ஏற்படாது என்பதற்கு அவர்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை என்றும், இது தனக்கு பெருத்த ஏமாற்றமளிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஹேஸ்டிங்ஸ் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 72 முதல்தர போட்டிகளில் 235 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
தனது மனைவி ப்ரியான்னன் மற்றும் அவர்களது உறவினர்களின் உதவியுடன் கஃபே ஒன்றை திறக்க உள்ள ஹேஸ்டிங்ஸ், தனது இந்த நிலைமையை ஸ்போர்ட்டிவ் ஆக எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.