கலிபோர்னியாவில் இடம்பெற்ற காட்டுத்தீவிபத்து வைரலாகும் புகைப்படம்

261

கடந்த வாரத்தில் இரு பாரிய காட்டுத்தீவிபத்து சம்பவங்கள் கலிபோர்னியாவில் இடம்பெற்றுள்ளது.

இதனை நாசாவின் Advanced Rapid Imaging and Analysis (ARIA) குழு விண்வெளியில் இருந்து படம் பிடித்து வெளியிட்டுள்ளது.

இதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் Copernicus Sentinel-1 எனும் சாட்டிலைட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இம் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தின்போது ஒட்டுமொத்தமாக சுமார் 225,000 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 42 பேரை வரை இக் காட்டுத் தீயில் சிக்கி இறந்திருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE