சற்றுமுன் மஹிந்த தரப்புக்கு மனோ விடுத்துள்ள எச்சரிக்கை!

136

 

சற்றுமுன் மஹிந்த தரப்புக்கு மனோ விடுத்துள்ள எச்சரிக்கை!

இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வின்போது பிரதமர் மஹிந்த உட்பட்ட அமைச்சர்களுக்கு தாம் எந்தவிதத்திலும் உரையாற்றுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த அவர்,

“நேற்று மாலை, ஐ.தே.க தலைவர் ரணிலுக்கு அறிவித்து விட்டு, பொறுப்புள்ள சிறுபான்மை கட்சித்தலைவர்கள் என்ற அடிப்படையில், நான், நண்பர்கள் ரிஷாத், ரவுப் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்து “நெருக்கடி நிலைமையை” தீர்ப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

நேற்று பாராளுமன்றத்தில், 122 எம்பீக்கள், ஒரு நம்பிக்கை இல்லா பிரேரணையை, மகிந்த மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக நிறைவேற்றி உள்ளார்கள். ஆகவே இன்று இந்நாட்டில் ஒரு பிரதமரோ, அமைச்சரவையோ கிடையாது. இந்நிலையில் ஜனாதிபதி சிறிசேன உடனடியாக புதிய பிரதமரையும், அமைச்சர்களையும் நியமிக்க கடமைப்பட்டுள்ளார். எந்த ஒரு தீர்வு முயற்சியும், இந்த அடிப்படையை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே ஜனாதிபதி, இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவருடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இனி நடத்தப்படாது.

இன்று காலை அவரது செயலகத்தில், சபாநாயகர், ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உட்பட ஒரு கட்சி தலைவர் கூட்டத்தை கூட்டுவதாக ஜனாதிபதி எம்மிடம் சொன்னார். அதற்கான அழைப்பும் எமக்கு கிடைத்தது. எனினும் நேற்று பின்னிரவில், ஜனாதிபதி, நம்பிக்கை இல்லா பிரேரணையை நிராகரித்து, ஒரு கடிதத்தை, சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பியுள்ளார். இந்த நிலைப்பாட்டை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆகவே இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற இருந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் நாம் பாராளுமன்றம் செல்வோம். இன்று பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும், “பாராளுமன்ற உறுப்பினர்” களாக மட்டுமே பங்குபற்றுவார்கள். இன்று எவரும் அங்கே “பிரதமர்” அல்லது “அமைச்சர்” என்ற அடிப்படைகளில் உரையாற்ற முடியாது. அதற்கு நாம் இடம் கொடுக்க மாட்டோம்.” என்றார்.

SHARE