தொழிலாளர்களின் சம்பள கோரிக்கை புறம் தள்ளி விடப்படக் கூடாது

123

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மை மற்றும் அரசியல்வாதிகளின் அக்கறையின்மை என்பவற்றை காரணம் காண்பித்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பள கோரிக்கை புறம் தள்ளி விடப்படக் கூடாது என பெருந்தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கு குறித்த தொழிற்சங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடித்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு செயளாலர் நாயகமும் லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் பொதுச் செயளாலருமான எஸ்.இராமநாதனால் முதலாளிமார் சம்மேளனத்திற்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE