முஸ்லீம்கள் சுடப்படும் போது நீங்கள் எமக்காய் ஒற்றுமை படவில்லை * பள்ளிகளுக்குள் பன்றி இறைச்சி வீசி உடைக்கப்பட்ட பொழுதும் நீங்கள் ஒன்று படவில்லை

170

 

 

* முஸ்லீம்கள் சுடப்படும் போது நீங்கள் எமக்காய் ஒற்றுமை படவில்லை

 

* பள்ளிகளுக்குள் பன்றி இறைச்சி வீசி உடைக்கப்பட்ட பொழுதும் நீங்கள் ஒன்று படவில்லை

* பேருவளை அளுத்கம அம்பாறை திகன தம்புள்ள என்று ஒவ்வொரு இடமாக நாம் அழிக்கப்பட்ட போது நீங்கள் ஒற்றுமை படவில்லை , எமக்காய் குரல் கொடுக்கவும் இல்லை

* அடைக்கப்பட்டு எரிந்த என் சகோதரனை நீங்கள் நேரில் சென்று கூட பார்க்கவில்லை

* மியன்மார் முஸ்லீம் மக்கள் அகதியாய் தஞ்சம் புகுந்த போது , தலை முடி இழுக்க அவர்களை வெளியேற்றும் போது நீங்கள் ஒற்றுமை படவில்லை

* ஊரே கடலுக்குள் செல்ல போகிறது என்று மக்கள் மன்றாடியும் நீங்கள் ஒன்று படவில்லை

இன்று உம்ராஹ்கு செல்கிறீர்கள்
ஒன்றாய் உரக்க கத்துகிறீர்கள்
நீதிமன்றம் செல்குறீர்கள்

என்னவாயிற்று
வாங்கிய காசுக்கும் பதவிக்கும் நன்றிக் கடனா ,
இந்த பிழைப்புக்கா எங்கள் வாக்கை தந்தோம் .
உங்கள் ஒற்றுமை எம் தேவைகளுக்காய் இல்லை உங்கள் எஜமானனின் தேவைக்காய் மட்டுமே ,

எங்களிடம் நடித்து எங்களை ஏமாற்றலாம் , உங்கள் மீதுள்ள நம்பிக்கைக்கு மக்களை ஏமாற்றலாம். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

உங்கள் நரம்புகள் இழுத்துக் கொண்டால் நாம் அவனிடமே பாதுகாப்பு தேடிக்கொள்ள வேண்டும்.

அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக , ஆமீன் .
புதிய தலைமைகளை உருவாக்க எம்மை ஒற்றுமை படுத்துவானாக

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்.
நீங்களும் , நானும் மரணிக்க வேண்டும்

SHARE