மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

121

கஜா புயலால் வடக்கின் சில பகுதிகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அவசர உதவியை பெற்றுக் கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உதவியை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த புயல் காரணமாக யாழ். குடநாட்டில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சில சமயங்களில் காற்றின் வேகம் 100 கிலோமீற்றர வரை அதிகரிக்க கூடும். யாழ். குடாநாட்டிலும், கிளிநொச்சி மாவட்டத்திலும் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்கப்படுகிறது.

காற்றின் வேகம் மணிக்கு 110 கிலோமீற்றர் வரை அதிக்கக்கூடும் என்பதால் கடல் கொந்தளிப்பதாக மாறக்கூடும் என வளிமண்லவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் கஜா புயலின் தாக்கங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென இடர் முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும் கஜா புயல் அடுத்து வரும் ஆறு மணித்தியாலங்களில் நலிவடைந்து மேற்கு திசை நோக்கி நகரும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE