ஜோதிகாவின் சம்பளம் – மற்ற நடிகைகளுக்கு அதிர்ச்சி

145

திருமணத்திற்க்கு பிறகு பெரிய இடைவெளி விட்டு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து சினிமாவில் கலக்கிவருகிறார் ஜோதிகா.

அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள காற்றின் மொழி படமும் வெளியாகி சூப்பர் ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது. இந்த படத்திற்காக ஜோதிகா 1.25 கோடி சம்பளம் வாங்கினாராம்.

தற்போது அடுத்து அவர் அறிமுக இயக்குனர் S.ராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அந்த படத்திற்காக அவருக்கு 1.5 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறது என கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்கள் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக ஜோதிகா சம்பளம் வாங்குவது மற்ற நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

SHARE