நடிகை ஸ்ருதி ஹாசன் என்னதான் விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு கைவசம் எந்த தமிழ் படமும் இல்லை.
அவர் தற்போது சின்னத்திரைக்குள் நுழைந்து ஹலோ சகோ என்கிற பெயரில் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அதில் பிரபலங்கள் பலரையும் அவர் பேட்டி எடுக்கிறார்.
இந்நிலையில் அடுத்த வருடம் ஆங்கிலத்தில் ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிடவுள்ளதாக அவர் ட்விட்டரில் கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.