குழந்தைகள் கண்முன்னே கொடூரமாகக் குத்தி கொல்லப்பட்ட தாய்

181

ஒபேவில்லியே பகுதியில் 28 வயதுடைய பெண் ஒருவர், அவரது பிள்ளைகள் முன்னிலையில் கொடூரமாகக் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் ஒபேவில்லியே (Aubervilliers – Seine-Saint-Denis) இலுள்ள Quatre-Chemins பகுதியில் நேற்று இரவு 11.00 மணியளவில் நடந்ததாக கூறப்படுகின்றது.

குறித்த பெண்மணி 5 பிள்ளைகளின் தாயராவார். இந்தப் பெண்மூன்னறாவது பிரசவத்தில் மூன்று பிள்ளைகள இவர் பெற்றுள்ளார். இந்தக் கடைசி மூன்று பிள்ளைகளும் மிகவும் சிறிய வயதுயைடவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் பல்பொருள் அங்காடியின் காசாளராக முன்பு பணிபுரிந்தவர்.

ஒபேவில்லியேவிலுள்ள 39, rue de Presles இலிருக்கும் HLM வீட்டின் ஒன்பதாவது மாடியிலேயே இந்தப் படுகொலை நடந்துள்ளது. இந்தப் படுகொலை நடந்த சமயம் இவரின் ஐந்து பிள்ளைகளும் அங்கு இருந்துள்ளனர்.

இந்நிலையில் இவரின் உடலில் பல கத்திக்குத்துக்கள் இருந்துள்ளதாகவும் இதனிடையில் கொலையாளி தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகின்றது.

சம்பவமறிந்த அயலவர்கள் இரத்தவெள்ளத்தில் கதவின் வெளியெ வந்து வீழ்ந்த பெண்ணைக் கண்ட பக்கத்து விட்டுப் பெண்மணி உடனடியாகக் காவற்துறையினர்க்கும் அவசரமுதலுதவிப் படையினர்க்கும் அறிவித்துள்ளார்.

மேலும் பொபினி குற்றிவியல் நீதிமன்றம், உடனடி விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது.

கொல்லப்பட பெண் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது இன்னமும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE