மஹிந்த ராஜபக்சவின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அச்சகத்தினால் அச்சிடப்பட்ட அந்த போஸ்டர்கள் அரசாங்க செலவில் நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மஹிந்தவின் பிறந்த தினத்திற்காக நாட்டு மக்களின் பணம் செலவிடப்பட்டமை பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக தற்போது மாறியுள்ளது.
இதேவேளை மஹிந்தவின் பிறந்த நாளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட புண்ணிய தானம் வழங்கும் நிகழ்வுகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாரஹென்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற தான நிகழ்வில் ஷிரந்தி ராஜபக்ச மற்றும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு மஹிந்தவுக்கு மேலும் சக்திகள் மற்றும் தைரியம் கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொள்வதாக மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.