அமெரிக்க ஜோடி சம்பியன்

178

ஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரின், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்க ஜோடியான ஜெக் சோக் – மைக் பிரையன் ஜோடி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அமெரிக்க ஜோடியான ஜெக் சோக், மைக் பிரையன் ஜோடி, பிரான்ஸ் ஜோடியான பியர்-ஹியூஜஸ் ஹெர்பர்ட், நிக்கோலா மஹட்  ஜோடியை எதிர்கொண்டது.

எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக அமைந்த இப்போட்டியில், முதல் செட்டை 7-5 என போராடி பிரான்ஸ் ஜோடி கைப்பற்றியது.

இதனையடுத்து, மீண்டெழுந்த அமெரிக்க ஜோடி 6-1 என செட்டை எளிதாக கைப்பற்றி பதிலடி கொடுத்தது.

இதனால் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் மிகவும் பரபரப்பாக நகர்ந்தது. இதில் கடுமையாக போராடி 13-11 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஜோடி வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

SHARE