நவீன் இயக்கத்தில் உருவாகவுள்ள அக்னிச் சிறகுகள் படம்

144

நவீன் இயக்கத்தில் உருவாகவுள்ள அக்னிச் சிறகுகள் படம், நடிகர் விஜய் ஆண்டனிக்கு வித்தியாசமான டைட்டிலாக அமையவுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையும் வரை வேறு படங்களில் நடிக்க வேண்டாமெனவும் விஜய் ஆண்டனியின் நடை, பேச்சு ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும் நவீன் தெரிவித்துள்ளதாக படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

அக்னிச் சிறகுகள் படத்தில் புதிய விஜய் ஆண்டனினை தான் ரசிகர்கள் காண்பார்களென நவீன் கூறியுள்ளார்.

இப்படத்தில் பிரகாஷ் ராஜ், அருண் விஜய், ஷாலினி பாண்டே மற்றும் நாசர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை பிச்சைக்காரன், சைத்தான், எமன், காளி, திமிரு புடிச்சவன் உள்ளிட்ட படங்களில் தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பெரும் பாராட்டை விஜய் ஆண்டனி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE