தமிழில் வெளியாகும் புதிய படங்கள் இணையதளங்களிலும் உடனேயே வந்து விடுகின்றன.
சமீபத்தில் திரைக்கு வந்த ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விஷால், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் அனைத்து படங்களும் இணையதளத்தில் வெளியானது. இதனால் வசூல் பாதிக்கப்பட்டன.
இதை தடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் முன் எச்சரிக்கை எடுத்தது. தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் ஏற்பாடு செய்தது. அதையும் மீறி இப்போது ஜோதிகா நடித்து கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த காற்றின் மொழி படமும் இணையதளத்தில் வெளியாகி விட்டது. படக்குழுவினர் கோர்ட்டுக்கு சென்று இணையதளத்தில் படம் வெளியாவதற்கு தடை பெற்று இருந்தனர்.